4 மாதங்களில் 430 கொலைகள்… கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!!

49

கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களில் 430 கொலைகளும், 1262 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா முழுவதுமே சமீபமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹூப்ளியில் நேஹா ஹிரேமத், அஞ்சலி, குடகில் மீனா என அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) சமீபத்திய குற்றங்களின் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது, கடந்த நான்கு மாதங்களில் கர்நாடகாவில் நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புள்ளி விவரத்தை, மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற கொலை, உடல் ரீதியான துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் (போக்சோ) வழக்குகள் அதிகரித்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. மேலும் போதைப்பொருள் வழக்குகளும், பாலியல் வன்கொடுமை மற்றும் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன.

கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களில் 430 கொலைகள் நடந்துள்ளன. 1,262 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 198 பாலியல் பலாத்கார வழக்குகள், 6,063 தாக்குதல் வழக்குகளும், 2,327 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7,421 சைபர் க்ரைம் குற்றங்களும், 450 கொள்ளை வழக்குகளும் கர்நாடகாவில் பதிவு செய்யப்ப்டடுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் கர்நாடகாவில் நடந்த குற்றங்களின் விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில், 2022-ம் ஆண்டு 1,370 கொலைகளும், 2023-ம் ஆண்டு 1,295 கொலைகளும், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதுவரை 430 கொலைகளும் நடைபெற்றுள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு 3,192 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 3,8565 என்றும், 2024-ம் ஆண்டு நான்கு மாதங்களில் 1,262 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பலாத்கார வழக்குகளும் கர்நாடகாவில் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

அதன்படி கர்நாடகாவில் கடந்த 2022-ம் ஆண்டு 537 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2023-ம் ஆண்டு 609 வழக்குகளும், 2024 ஏப்ரல் மாதம் வரை 198 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதே போல பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளும் அதிகரித்துள்ளன. 2022-ம் ஆண்டு 5,862 வழக்குகளும், 2023-ம் ஆண்டு 6486 வழக்குகளும், 2024 ஏப்ரல் வரை 2,327 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Previous articleமனைவி கழுத்தை நெறித்து செல்பி எடுத்த கணவன்.. அடுத்து நடந்த விபரீதம்!!
Next article14 வயது தம்பியை செல்போன் தராததால் கொலை செய்த அண்ணன்!!