கணவர் கொடுத்த திருமணநாள் பரிசுத்தொகையில் வாங்கிய லொட்டரி.. கோடீஸ்வரரான மனைவி!!

45

திருமண நாளில் கணவர் கொடுத்த பணத்தில் மனைவி வாங்கிய லொட்டரிக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.

லொட்டரி பரிசுத்தொகை

இந்திய மாநிலமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பயல் என்பவர் தனது கணவர் கொடுத்த பரிசுத்தொகையின் மூலம் வாங்கிய லொட்டரியால் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளின் போது பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பயலுக்கு அவரது கணவர் பரிசுத்தொகை வழங்கியுள்ளார். அவர் அந்த தொகையில் லொட்டரி வாங்கி வந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தான் வாங்கும் லொட்டரியில் ‘3’ என்ற எண் அதிகம் இருப்பதை பயல் உறுதி செய்து வந்தார். அதாவது தனது ராசி எண் என்ற காரணத்தால் பயல் இந்த நம்பரை தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில், தனது 16 -வது திருமண நாளையொட்டி கணவர் கொடுத்த பரிசுத்தொகையில் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா (DDF) லொட்டரியை பயல் வாங்கியுள்ளார்.

மே 3 -ம் திகதி பயல் வாங்கிய லொட்டரிக்கு 1 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடியே 22 லட்சம்) பரிசு தொகை கிடைத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் DDF லொட்டரியை பயல் வாங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிபத்தில் இறந்த நடிகை.. உயிரை மாய்த்துக்கொண்ட சக நடிகர்… உலா வரும் வதந்திகள்!!
Next article13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்… AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும் பாசப் போராட்டம்!!