பெண் போலீஸ் தற்கொலை செய்த சோகம்.. கதறும் குடும்பம்!!

50

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஞ்சலி. இவர் 2017ல் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

அஞ்சலி, கணவர் செல்வகுமாருடன் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செல்வகுமார் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் மே 18ம் தேதி அஞ்சலி மட்டும் 2 நாள் விடுப்பில் தன் கணவர் செல்வகுமாரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்திற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.

கணவருக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த அஞ்சலி அந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமெட்ரோவில் கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்.. வைரல் வீடியோ!!!
Next article14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர்.. ஒன்றாக சேர்த்து வைத்த நீதிமன்றம்!!