மெட்ரோ ரயில் பயணங்களில் தொடர் புகார்கள், சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை பொதுமக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களையே நம்பியுள்ள்னார்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினமும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் அத்து மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் பயணிகள் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோவில் மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடும் காட்சி பயனர்களிடையே அருவறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அபராதத்தோடு நின்றுவிடாமல் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
View this post on Instagram