விபத்தில் இறந்த நடிகை.. உயிரை மாய்த்துக்கொண்ட சக நடிகர்… உலா வரும் வதந்திகள்!!

43

தெலுங்கு நடிகை ஒருவர் கடந்த வாரம் விபத்தொன்றில் பலியான நிலையில், அவரது சக நடிகர் ஒருவர், தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, பவித்ரா ஜெயராம் என்னும் நடிகை, ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் பலியானார். அந்தக் காரில், பவித்ராவுடன், அவரது சகோதரி அபேக்‌ஷா, சாரதி ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், பவித்ராவின் சக நடிகரான சந்திரகாந்த் வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்நிலையில், பவித்ராவும் சந்திரகாந்தும் காதலித்துவந்ததாகவும், திருமணம் செய்துகொண்டதாகவும், சேர்ந்து வாழ்ந்துவந்ததாகவும் பல வதந்திகள் பரவிவருகின்றன.

பவித்ராவின் மரணத்தால் சந்திரகாந்த் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அவரது இழப்பை தாங்க முடியாமல்தான் சந்திரகாந்த் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வதந்திகளை உறுதி செய்வதுபோல், உயிரிழக்கும் முன் சந்திரகாந்த் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுடன் ‘என் பவி உயிருடன் இல்லை, இதுதான் நான் உன்னுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம், நீ என்னைத் தனியாக விட்டுச் சென்றதை என்னால் தாங்க முடியவில்லை, தயவு செய்து திரும்பி வந்துவிடு’ என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous article14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர்.. ஒன்றாக சேர்த்து வைத்த நீதிமன்றம்!!
Next articleகணவர் கொடுத்த திருமணநாள் பரிசுத்தொகையில் வாங்கிய லொட்டரி.. கோடீஸ்வரரான மனைவி!!