ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலனை எரித்த காதலியும் உயிரிழப்பு!!

24

மயிலாடுதுறையில், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ் என்பவரும், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் படித்து வந்த சிந்துஜா (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த சிந்துஜா, கல்லூரிக்கு செல்லும் போது பேருந்து நிலையத்தில் ஆகாஷூடன் அறிமுகமாகி இருவரும் பழகி வந்த நிலையில், காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால், அது குறித்து ஆகாஷூக்கும், சிந்துஜாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே 9ம் தேதி பூம்புகார் கடற்கரை பகுதிக்கு ஆகஷுன் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஜோடியாக சென்றுள்ளனர்.

கடற்கரையில் இருவரும் தனிமையில் சந்தித்து பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்புகையில் மீண்டும் ஆகாஷ் பழகி வரும் பெண் குறித்த பேச்சு வாக்குவாதமாக இருவருக்குள்ளும் எழுந்துள்ளது.

அப்போது அந்த பெண்ணிடம் இனி பேசக்கூடாது என்று சிந்துஜா வாக்குவாதம் செய்துள்ளார். தான் நட்பாகவே பழகி வருவதாக ஆகாஷ் கூறிய நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளாத சிந்துஜா, இவர்களது மோட்டார் சைக்கிள் காவிரி பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, தான் கைப்பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதனுள் இருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்து பற்ற வைத்துள்ளார்.

இதில் நெருப்பு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், ரோட்டில் இறங்கி ஓடிய ஆகாஷை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டனர். பயங்கர தீக்காயங்களுடன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசாரின் விசாரணையில் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் கொடுத்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் கடந்த 14ம் தேதி ஆகாஷ் உயிரிழந்தார். இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்துஜாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவரும் சந்தித்துப் பேசி பழகி காதலை வளர்த்த அதே பேருந்து நிலையத்தில், இருவருமே தீப்பற்றி எரிந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது அவர்களது நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous article3 வயது மகளைக் கொன்று, உடலுடன் 4 கி.மீ. சுற்றித்திரிந்த இளம்பெண்!!
Next articleதெருநாய்க்கடியால் 4 வயது சிறுமி மரணம்.. தொடரும் விபரீதங்கள்!!