கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை ஏவி கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி!!

59

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (40). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கோழிப்பண்ணை ஒன்றில் பாரிச்சாமி, தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்போது வெளிநாட்டில் வேலை செய்து வந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் ரமேஷ் விடுமுறை தினத்தில் ஊருக்கு வந்து சென்றார்.

அப்போது பரிமளாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரமேஷின் கோழிப்பண்ணையில் வேலையில் இருந்து பாரிச்சாமி நின்றுவிட்டார்.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் காவலாளியாக பாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். பின்னர், குடும்பத்துடன் அங்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் பரிமளா, வெளிநாட்டில் இருக்கும் கள்ளக்காதலனிடம் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி கதறி அழுதுள்ளார்.

மேலும் கணவரை கொலை செய்ய வேண்டும் என பரிமளா கூறினார். தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாகவும் ரமேஷ் கூறியதை அடுத்து அதற்கான ஏற்பாடுகளை பரிமளா செய்து வந்தார்.

அதன்படி 7 பேர் கொண்ட கூலிப்படையினர் மே 12ம் தேதி இரவு 10 மணியளவில் கோழி பண்ணைக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பாரிச்சாமி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார்.

அப்போது கூலிப்படையினர் கத்தி மற்றும் உருட்டு கட்டைகளால் பாரிச்சாமியை கடுமையாக தாக்கினர். உயிரிழந்துவிட்டதாக நினைத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாரிச்சாமியை, பரிமளா மற்றும் குழந்தைகள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கூலிப்படை ஏவி மனைவியே கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பரிமளா, கூலிப்படையை சேர்ந்த குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலிப்படையினர் 5 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதெருநாய்க்கடியால் 4 வயது சிறுமி மரணம்.. தொடரும் விபரீதங்கள்!!
Next articleகாசுக்காக இப்படிலாமா செய்வாங்க… தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த காரியம்!!