மதம் மாறலைன்னா ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன்… இளம்பெண்ணை மிரட்டிய இளைஞர்!!

36

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை போஜிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சிறுபான்மை மதத்திற்கு மாறுமாறு தனது மகளை இளைஞர் ஒருவர் மிரட்டியுள்ளார். மே 7ம் தேதி, என் மகளுக்கு வாட்ஸ்அப்பில் ஹாய்..ஹலோ என்று மெசேஜ் வந்தது. அந்த மெசேஜுக்கு எனது மகள் பதி லளிக்கவில்லை.

இந்நிலையில், அதே எண்ணில் இருந்து வாலிபர் ஒருவர் பேசினார். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். நீ சிறுபான்மை மதத்திற்கு மாறினால் உன்னை கல்யாணம் செய்து நன்றாக பார்த்துக்கொள்வேன் என்றும் கூறினார். இதைக் கேட்டு என் மகள் பதில் சொல்லாமல் போனை துண்டித்தாள்.

இந்நிலையில் கடந்த மே 19ம் தேதி அதே எண்ணில் இருந்து எனது மகளுக்கு ஆபாசமான செய்திகள் மற்றும் ஆபாச வீடியோக்கள் வந்தன. இதை அழித்தால், அந்த எண்ணில் இருந்து பேசிய வாலிபர், வீட்டுக்கு வந்து உன்னை கடத்துவதாக மிரட்டினார். இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

மேலும் மதம் மாறாவிட்டால் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்புவேன் என்றும் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மகளின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் எண் பரேலி போஜிபூரை சேர்ந்த பைசல் என்பவருடையது என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் பைசலின் தந்தை அமீனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous article80 சவரன் நகைகள் கேட்டு கொடுமை.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
Next articleவீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!!