இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, கொலையை மறைப்பதற்காக துண்டு துண்டாக்க முயற்சி செய்த கணவன், துண்டாக்க முடியாததால் பதற்றத்தில் போலீசில் சிக்கியுள்ளான்.
சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும், பாலியல் தொல்லைகளும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் அப்படியானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், பசுபள்ளியில் வசிப்பவர் நாகேந்திர பரத்வாஜா. இவரது மனைவி மதுலதா. தபதி இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் நாகேந்திரன் தனது மனைவியை கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
ஆத்திரத்தில் மனைவியைக் கொன்றவர், அதை மறைக்க அவரது உடலை துண்டு துண்டாக வெட்ட முயன்றார். துண்டு துண்டாக வெட்ட முடியாதததால் கியாஸ் கசிவில் தான் மனைவி உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைக்க முயற்சித்துள்ளார்.
இவை அனைத்தும் தோல்வியடைந்து அங்கிருந்து வெளியேறினார். அப்போது அக்கம்பக்கத்தினர் இவரது பதற்றத்தையும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தையும் பார்த்து போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில் நாகேந்திரனின் திடுக்கிடும் செயல் தெரிய வந்தது. அதன் பின்னர் நாகேந்திரன் மறைத்து வைத்திருந்த லதாவின் உடலை மீட்ட அதிகாரிகள், லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் நாகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.