மனைவியை பலருக்கு திருமணம் செய்து வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கணவன்!!

48

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பானூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக ராதாகிருஷ்ணனை அவரது மனைவி விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு, அவருக்கு மறுமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் தேடினர். இதை அறிந்த கேரளாவின் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அப்போது கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காட்டினார்.

அந்தப் பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பிடித்து போனது. அதன்பின், ராதாகிருஷ்ணனுக்கும், அப்பெண்ணுக்கும் , திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டில் ஏழை என்பதால் புரோக்கர் உதவி கேட்டுள்ளார்.

இதை கேட்ட ராதாகிருஷ்ணன், அந்த பெண்ணுக்கு ஒன்றரை பவுன் நகை வாங்கி கொடுத்தார். மேலும் புரோக்கரிடம் ரூ.80 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர்.

கல்யாண தேதியும் நேரமும் நெருங்கியதால், ராதாகிருஷ்ணனுக்கும், பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் தாராபுரம் வந்தனர். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முதலிரவில், மணமகள் ராதாகிருஷ்ணனிடம், “அவளுக்கு மாதவிடாய் வந்துவிட்டது, முதல் இரவை இன்னொரு நாள் வைத்துக் கொள்வேம்” என்று கூறி, முதல் இரவை லாவகமாகத் தவிர்த்து விட்டுள்ளார்.

மறுநாள் அவரது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு செல்ல வேண்டும் என்று கூறவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பொள்ளாச்சிக்கு சென்ற போது கேரள பெண் திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் தாராபுரம் வந்து நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கேரள பெண் ராதாகிருஷ்ணனிடம் நகை, பணம் கேட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், திருமணமாகாத பல வாலிபர்களிடம் பணம், நகை பறிப்பதற்காக தனது மனைவியை வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து திருமண மோசடியில் புரோக்கர் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் பணத்திற்காக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க பெயர் மாற்றி ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து திருமண புரோக்கர் மற்றும் அவரது மனைவியை தாராபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleகுழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை – நடந்தது என்ன?
Next article4 வயது சிறுவன் அடித்து கொலை கள்ளக்காதலால் விபரீதம்!!