காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூபர்… வெடித்த ஏர்பேக்.. வைரல் வீடியோ!!

52

பிரபல யூடியூபர் சஞ்சு டெக்கி கேரள மாநிலம் , ஆலப்புழாவில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரில் ஆவேசம் படத்தில் வருவது போன்று நீச்சல் குளம் அமைத்து சாலையில் சாகசத்தில் ஈடுபட்டார்.

இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் நேரலையில் பதிவிட்டார். தன்னுடைய நண்பருடன் காரில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு இடத்தில் கார் நின்றது.

அப்போது திடீரென எஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்து ஏர்பேக் வெடித்து விட்டது. உடனடியாக காரில் இருந்த தண்ணீரை திறந்து சாலையில் விட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதை நேரலையில் லட்சக்கணக்கானோர் பார்த்த நிலையில் உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் டக்கியை பிடிக்க சென்றனர்.

உடனடியாக அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அவரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அத்துடன் காவல்துறையினர் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.

Previous article19 வயது காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி அடுத்தடுத்து நடந்த விபரீதம்!!
Next articleEMI தொகை கட்டாததால் ஸ்கூட்டர் பறிமுதல்… வங்கி முன்பு கதறி அழுத இளைஞர்!!