5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்… வாட்ஸ் அப் மெசேஜால் பரபரப்பு!!

42

ஐந்து வயது குழந்தையை விட்டு விட்டு மற்றொரு ஆணுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தற்கொலை செய்வது தொடர்பாக தனது தோழிக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் உயிர் இழப்புகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பாவி குழந்தைகள் அனாதைகளாகி வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான், சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள எழில் நகர் 5வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியா மேரி. இவருக்குத் திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபருடன் செல்ஃபியா மேரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் இருவருக்குமிடையே தகாத உறவாக மாறியது. தனியார் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணியாற்ற வந்த விஜய்க்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாய் இவர்கள் இருவரும் நெருக்கம் காட்டி வந்ததை இரண்டு வீட்டாரும் கண்டுபிடித்தனர். இதனால் விஜய், செல்ஃபியா மேரி ஆகிய இருவரையும் கண்டித்தனர். ஆனால், அதைப்பற்றி அவர்கள் இருவரும் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு தங்களது குழந்தைகளைத் தவிக்க விட்டு விஜய், செல்ஃபியா மேரி இருவரும் அதே பகுதியில் தனியே வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செல்ஃபியா மேரி தனது தோழி ரேகாவுக்கு செல்போனில் வாட்ஸ் அப் மெசெஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய குடும்பத்தினர் விஜயையும், என்னையும் சேர்ந்து வாழ விடமாட்டார்கள். நாங்கள் இருவரும் தற்கொலை செய்யப் போகிறோம்” என கூறியிருந்தார்.

இந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரேகா, உடனடியாக பெரும்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால், அங்கு விஜய், செல்ஃபியா மேரி வீட்டில் சடலங்களாக கிடந்தனர்.

வீட்டின் வரவேற்பறையில் விஜயும், படுக்கை அறையில், செல்ஃபியா மேரியும் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தினர். அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதாய்மாமன் இறந்ததை கேட்டதும் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
Next articleதம்பியுடன் தகாத உறவு… மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!!