வேறொரு பெண்ணுடன் உல்லாசம்… கணவனை கையும் களவுமாக பிடித்த இளம்பெண்!!

24

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நக்ஷத்ரா (29). அவர் 2012 ஆம் ஆண்டு மிஸ் விசாகப்பட்டினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் திரையுலகைச் சேர்ந்த திபுரானே சாய்வெங்கடதேஜாவும் (35) நட்பாக பழகி, காதலர்களாக வலம் வந்தனர். இருவருக்கும் 2013ல் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், நக்ஷத்ரா தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதை அறிந்ததும், அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று போலீஸ் மற்றும் மீடியாக்களை அழைத்துக்கொண்டு நக்ஷத்ரா சாய்வெங்கடதேஜா வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர் தேஜாவையும் மற்றொரு இளம் பெண்ணையும் கையும் களவுமாக பிடித்தார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தேஜாவுடன் இருந்த பெண்ணை நக்ஷத்ரா தாக்கியுள்ளார். இதைப் பார்த்த தேஜா, நக்ஷத்ராவை தாக்கி, அவரது கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதையடுத்து நக்ஷத்ரா, சாய்வெங்கடதேஜா மற்றும் அவருடன் இருந்த சிறுமியை பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சாய்வெங்கடதேஜா, இந்த பெண் சினிமாவில் நடிப்பது தொடர்பாக வந்ததாக கூறினார். எங்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று நக்ஷத்ரா கூறினார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous article“இனி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை..” பகீர் கிளப்பிய பிக்பாஸ் பிரபலம்!!
Next articleமலக்குடலில் ஒரு கிலோ தங்கத்தை கடத்திய விமானப்பணிப்பெண்.. சினிமா பாணியில் அதிர்ச்சி!!