10ம் வகுப்பில் 10 முறை தோல்வி : மீண்டும் முயற்சித்து 11 வது முறை தேர்ச்சிபெற்ற மாணவன்!!

129

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்ற மாணவனை ஊர்மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ் முண்டே என்பவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இவர், கடந்த 2018 -ம் ஆண்டு 10 -வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர், மனம் தளராமல் தொடர்ந்து தேர்வுகளை எழுத ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வு எழுதி தேர்ச்சிபெற முயற்சி செய்துள்ளார். இந்நிலையில், 11 -வது முறை தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா பொதுத் தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாகியுள்ளது. ஆனால், இந்த முறை அனைத்து பாடங்களிலும் மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த செய்தியை கேட்ட பெற்றோர் மகிழ்ச்சியில், மேளதாளத்துடன் மகனை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை பார்த்த ஊர்மக்களும் மாணவனை தோளில் தூக்கிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Previous articleவயிறு வலியால் துடித்த இளம்பெண்.. பரிசோதனையில் அதிர்ச்சி.. 2.5 கிலோ முடி அகற்றம்!!
Next articleமூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு.. உலக சாதனை படைத்த இந்தியர்!!