தயவுசெய்து என்னை அடிக்காதீங்க.. கதறிய பிரபல தமிழ்ப்பட நடிகை..வைரலாகும் காணொளி!!

29

இந்தி நடிகை ரவீனா டாண்டனின் கார் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, சிலர் அவரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ரவீனா டாண்டன் (49). தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் ரவீனாவின் கார், சாலையில் சென்றுகொண்டிருந்த 3 பெண்கள் மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

வைரல் காணொளி

அப்போது காரில் இருந்து இறங்கிய ரவீனா தனது ஓட்டுநருக்காக அப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உடனே அங்கிருந்த நபர்கள் சிலர் ரவீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தள்ளியது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் ரவீனா ”தள்ளாதீர்கள்..தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்” என்று கதறுகிறார். மற்றொரு பெண், ரவீனா தன்னை தாக்கியதில் தனது மூக்கில் ரத்தம் வருவதாக முறையிடுகிறார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Previous articleமனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்!!
Next articleமது போதையில் தகராறு செய்த கணவனை குத்திக்கொன்ற பெண் காவலர்!!