6 மாத கைக்குழந்தையைக் கொன்று விட்டு தாய் தற்கொலை!!

59

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குழந்தை வேதாஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவர்களிடம் காட்டியும் பலனில்லை என்று தெரிகிறது. குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அழகு மீனா மனமுடைந்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அழகு மீனா தனது 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். பின்னர் பெட்ரோலை எடுத்தார். அப்போது அழகு மீனா தன் மீதும், தன் குழந்தை மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

குழந்தை உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறி துடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை வேதாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சிவகங்கை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபேசுவதை நிறுத்திய இன்ஸ்டா காதலன்.. மன உளைச்சலில் 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை!!
Next articleமனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்!!