ஐஏஎஸ் தம்பதியரின் மகள் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

113

மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஐஏஎஸ் தம்பதியின் மகள் தான் வசித்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள சுருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் லிபி ரஸ்தோகி (27). லிபி மகாராஷ்டிரா கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள். ஹரியானாவில் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

10வது மாடியில் இருந்து குதித்து லிபி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

லிபி தனது தேர்வு முடிவுகளைப் பற்றி கவலைப்பட்டதாக போலீசார் விசாரணைக்குப் பின்னர் தெரிவித்தனர். இதன் காரணமாக அவள் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறிய போலீசார், எனினும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

லிபியின் தந்தை விகாஸ் ரஸ்தோகி மகாராஷ்டிரா கல்வித் துறையில் முதன்மைச் செயலாளராகவும், அவரது தாயார் ராதிகா ரஸ்தோகி மாநில உள்துறை முதன்மைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

லிபியின் அறையில் சோதனையிட்ட போலீசார் தற்கொலைக்கு முன்னர் லிபி எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleதண்டவாளத்தில் கிடைத்த தண்டனை.. தாலியை அறுத்தவர் ரயில் மோதி மரணம்!!
Next articleபிரபல நடிகையின் கணவர், மகனுடன் தற்கொலை.. விளாசும் ரசிகர்கள்!!