‘கணவரின் மரணத்திற்கு பொறுப்பு..,’; மலையாள அடல்ட் வெப் சீரிஸ் நடிகையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அடல்ட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற நடிகை தியா கவுடா, தனது கணவர் மற்றும் அவர்களது நான்கு வயது மகனின் கொடூரமான மரணத்தைத் தொடர்ந்து அனைத்து பக்கங்களில் இருந்தும் கொடூரமான சைபர் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார்.
தியாவின் கணவர் ஷெரீப் மற்றும் மகன் அல் ஷிஃபாப் ஆகியோர் கடந்த வாரம் புதன்கிழமை தாங்கள் குடியிருந்து வரும் வாடகை வீட்டின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து நடிகை தியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷெரீப் அவர்கள் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரவியது.
கேரள மாநிலம் வாலாஞ்சேரியைச் சேர்ந்த ஷெரீப், சாவக்காட்டைச் சேர்ந்த நடிகை தியாவை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு குழந்தைப் பிறப்பிற்கு பின்னர் தோல்வியில் முடிந்தது. பின்னர் இந்த ஜோடி தனித்தனியாக வாழ முடிவு செய்தது.
தியா ஆலுவாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் ஷெரீப் மூன்று வாரங்களுக்கு முன்பு தனது மகனுடன் வாடகை வீட்டில் குடியேறினார்.
இந்நிலையில், ஷெரீப் தியாவுக்கு போன் செய்து, தங்கள் மகனைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் தன்னுடைய முடிவைப் பற்றி நடிகை தியா கவுடாவிடம் தெரிவித்துள்ளார்.
கணவரின் தொலைபேசி அழைப்பால் பதற்றமடைந்த தியா, ஷெரீப்பின் பக்கத்து வீட்டுக்காரரிடம் விவரத்தை கூறி ஷெரீப்பின் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறை அதிகாரிகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்த போது, ஷெரீப் மற்றும் மகன் இருவரும் இறந்து கிடந்தனர். அவர்களது உடலைப் பார்க்க இறுதி வரை தியா வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வாலாஞ்சேரியைச் சேர்ந்த ஷெரீப்பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் இருவரது சடலங்களைக் கைப்பற்றி இறுதிச் சடங்குகளுக்காக மலப்புரத்திற்குக் கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இருவரது தற்கொலைக்கும் நடிகை தியா தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.