பல வெள்ளித்திரை வாய்ப்புகளை ஏற்காத மதுரை முத்து சின்னத்திரையில் பல வருடங்களாக நகைச்சுவை மன்னனாக கலக்கி வருகிறார். ஸ்டாண்ட்-அப் காமெடியில் கைதேர்ந்த இவர், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் நகைச்சுவை மூலம் பலரை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.
இவர் லேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த முத்து மதுரைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னை திரும்பிய மதுரை முத்து மனைவி லேகா விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்த பிறகு மதுரை முத்து திருமணம் செய்து கொள்ள விரும்பாவிட்டாலும், குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நேரிட்டது.
மதுரை முத்து லேகாவின் நெருங்கிய தோழி நீத்து பல் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நீத்துவின் மூலம் மதுரை முத்துவுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
மதுரை முத்து இரண்டு மகள், மகன் மற்றும் மனைவியுடன் சமீபத்தில் கட்டப்பட்ட பிரமாண்ட வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி மதுரை முத்து குடும்பத்தினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும், நான் அவருக்காக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாற்றமடைகிறேன் என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார் நீது.
இவரின் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை முத்துவின் மனைவி நீத்து அவரை பிரிந்து வாழ்ந்து விவாகரத்து பெறப்போகிறார்களா? என தொடர்ந்து பலரும் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.