திடீரென கணவர் மரணம்.. அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

68

தஞ்சாவூர் வடக்குவாசல் சுண்ணாம்பு காள்வாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (43). கட்டிட தொழிலாளி இவரது மனைவி மல்லிகா (36). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் மல்லிகா சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மெய்யழகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டில் தூங்கிய மெய்யழகன் காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மெய்யழகன் இறந்து கிடந்தார்.

குழந்தைகளுடன் சிவகங்கை சென்ற அவரது மனைவி மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த மல்லிகா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இறுதிச்சடங்கு முடிந்து, உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவரை தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்து மயங்கி விழுந்த மல்லிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர் : இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!!
Next articleநீட் தேர்வெழுதிய மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சோகம்!!