பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தினால் அதை ஒழுங்கான முறையில் செய்துக்கொள்ள முடிவதில்லை.
குறிப்பாக பெண்களுக்கு ஓர் முக்கிய ஆசை இருக்கும். அதாவது எவ்வளவு வயதானாலும் முதல் இருந்த அழகிலேயே இருக்க வேண்டும் என்று. அது ஒரு சில பெண்களுக்கு அது நிரந்தரமாக இருப்பதில்லை.
ஆனால் இந்தியாவின் திரைதுறையில் இருக்கும் பிரபலங்கள் எவ்வளவு வயதானாலும் அதே அழனுடன் இருப்பார்கள். அதற்கு அவர்கள் பின்பற்றும் ஒரு சில குறிப்புகள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பிரபலங்கள் பின்பற்றும் இரகசிய குறிப்பு
ஆயுர்வேதம்
நாட்டில் இருக்கும் பல இந்திய பிரபலங்கள் பின்பற்றும் ஒரே நடைமுறையாக இருப்பது பழங்கால ஆயுர்வேத முறையாகும். இது உடல் மற்றும் மனம் இரண்டிலும் சமநிலையை உருவாக்கும்.
தியானம்
பல பிரபலங்கள் தங்களை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்வதற்கு தியானம் செய்கிறார்கள். தினமும் தியானத்தில் ஈடுபடுவது மனஅழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை வழங்கும். இது முகத்தில் பொலிவு ஏற்படவும் உதவும்.
நவீன சிகிச்சைகள்
பிரபலங்கள் பின்பற்றுவது பெரும்பாலும் வீட்டு வைத்தியங்களாக இருந்தாலும், வயதான அறிகுறிகளை தடுக்க நவீன சிகிச்சைகளை செய்கிறார்கள்.
லேசர் சிகிச்சைகள்
பிக்மென்டேஷன், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள், சரும தளர்ச்சியை தடுக்க லேசர் சிகிச்சைகளை பிரபலங்கள் செய்து வருகின்றனர்.
டயட்
பொதுவாகவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளுக்கும் பானங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் ஓர் தொடர்பு இருக்கிறது. இளமையான சருமம் மற்றும் ஆரோக்கியமான உடலை பெற நீங்கள் தினசரி தண்ணீரும் போதியளவு பழங்களும் சாப்பிட வேண்டும்.