தன் வீட்டில் சடலமாக கிடந்த 32 வயது நடிகை… துர்நாற்றம் வீசியதால் தெரிந்த விடயம்!!

18

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இந்தி நடிகை நூர் மாலபிகா தாஸ், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நூர் மாலபிகா தாஸ் (32). விமான பணிப்பெண்ணாக வேலைபார்த்த இவர், பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.

Siskiyaan, Backrod Hustle, Walkman Upaya, Charamsukh வெப் தொடர்களில் நடித்துள்ள நூர் மாலாபிகா, 2023யில் கஜோல் நடிப்பில் ‘The Trial’ வெப் தொடரில் தோன்றினார். சமூக ஊடகங்களில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த வாரம் நூர் மாலாபிகாவின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம வீசுவதாக பொலிஸிடம் புகார் கூறியுள்ளனர்.

சடலமாக மீட்பு

இதனையடித்து பொலிஸார் வந்து பார்த்தபோது நூர் மாலாபிகா மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக இருந்தது தெரிய வந்தது.

அவரின் அறையில் இருந்து மருந்து, செல்போன் மற்றும் டைரி ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நூர் மாலாபிகா தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

Previous articleஇனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சிறுமியை விருந்தாக்கிய கொடூரம்!!
Next articleவாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவிக்கும் 17 வயது சிறுமி… நுரையீரலில் ஏற்பட்ட துளை!!