துணி காயப்போட்ட கம்பியில் மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி உடல் கருகி பலி!!

26

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் வசித்து வருபவர் 38 வயது ராமு. இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 30 வயது சரளா. இவர்களுக்கு 13 வயதில் கீர்த்தனா, 6 வயதில் மேகா என இருமகள்கள்.

ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில் காயப்போட்டுள்ளார்.

அப்போது திடீரென மீட்டர் பெட்டியிலிருந்து கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்ததால் ராமு அலறினார். அவர் அலறிய சத்தம் கேட்டு வந்த சரளா அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதனால் சரளாவையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உடல் கருகி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்.. அறுவை சிகிச்சையில் விபரீதம்!!
Next articleபிரபல நடிகையுடன் தொடர்பு.. விவாகரத்துக்கு மல்லுக்கட்டும் பிரபல நடிகர்!!