300கி மிளகாய் சாஸை சாப்பிட்டு இளைஞர் கின்னஸ் ரெக்கார்ட்!!

49

சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள், லைக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி காரமான மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் சவாலில் இளசுகள் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.

இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் Chase Bradshaw என்பவர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டார். இதனை சாப்பிட்டதால் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Previous article15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… பிரபல காஸ்ட்டியூம் டிசைனர் கைது!!
Next articleமதுபோதையில் தினமும் ரகளை செய்த கணவன்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் தாய்பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தை!!