நாத்தனார் மகனுடன் உல்லாசம்.. இளம்பெண் கொலையில் அதிர்ச்சி!!

89

கள்ளத்தொடர்பால் இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு திருப்பதி (18), கேசவன் (16) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பழனியின் அக்கா மகன் தர்மபுரியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பழனியின் வீட்டில் தங்கி இருந்தபடி அந்த பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

அவருக்கும் சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிய நிலையில் இதனை அறிந்த பழனியும், அவருடைய மகன்களும் சத்யாவை கண்டித்துள்ளனர். ஆனால் சத்யா அவர்களின் பேச்சை கேட்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பழனியும், அவரது மகன்களும் வழக்கம் போல வெளியில் சென்றதும் மதிய நேரத்தில் வீட்டில் இருந்து சத்யாவின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா பிணமாக கிடந்தார்.

அருகிலேயே மாரியப்பன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் மாரியப்பன் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதே நேரம் வீட்டிற்கு வந்த சத்யாவின் மகன்கள் அல்லது கணவர் சத்யாவை கொலை செய்து விட்டு அவருடைய கள்ளக்காதலன் கழுத்தை அறுத்தார்களா அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை முயற்சி செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous articleகணவன், மனைவி இருவருமே தூக்கிட்டு தற்கொலை நிர்க்கதியான 2 குழந்தைகள்!!
Next articleமகனைக் கொன்று, அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற தாய்!!