மகனைக் கொன்று, அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற தாய்!!

63

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த குமார், உடனடியாக குடும்ப உறுப்பினர்களை உதவிக்கு அழைத்தார்.

குமாரின் அலறல் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வந்ததும், தேவி, மண்வெட்டியுடன், அவர்களையும் குமாரையும் வீட்டை விட்டு விரட்டினார்.இந்த கொடூர சம்பவம் குறித்து குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) ராம் அர்ஜ் மற்றும் வட்ட அதிகாரி சந்த்பூர் பாரத் சோன்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், குமாரின் புகாரின் அடிப்படையில் தேவி மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் அவளை விசாரிக்க முயன்ற போதிலும், தேவி அமைதியாக இருந்தார். இதற்கிடையில், அவர் “மனநிலை சரியில்லாதவர்” என்று அவரது சகோதரர் காவல்துறைக்கு தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleநாத்தனார் மகனுடன் உல்லாசம்.. இளம்பெண் கொலையில் அதிர்ச்சி!!
Next article9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில் ரூ.1.7 கோடி லாபம் : எப்படி?