தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்… பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்!!

14

தெருவில் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் நன்றாக சம்பாதித்து வருகிறார்.

இந்திய தலைநகரான டெல்லியில் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

சந்திரிகா நன்றாக படித்து வேலை கிடைத்தும் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்க முடிவு செய்தார்.

இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள தெருவில் தள்ளுவண்டியில் விற்கும் வடா பாவ் உணவை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.

இதுதொடர்பாக சந்திரிகா தீக்சித் பேசுகையில், “நான் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்று கடுமையாக உழைக்கிறேன். இதன்மூலம் தினமும் ரூ.40,000 சம்பாதிக்கிறேன். அனைவரும் இதேபோன்று சம்பாதிக்கலாம்.

ஆனால் அதற்கு முதலில் ஸ்மார்ட்போன் பார்ப்பதை நிறுத்த வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு தள்ளுவண்டியில் சாதாரணமாக தொழிலை ஆரம்பித்தேன்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து என் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதே லட்சியம்” என்று கூறியுள்ளார்.

Previous articleதிருமணமான பெண்ணுடன் உல்லாசம்… பள்ளிவளாகத்தில் சிக்கிய ஆசிரியர் மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்!!
Next articleபணியில் இருந்து திடீரென நீக்கம் விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு,,, சிக்கிய கடிதம்!!