13 வயது சிறுமி அமீபிக் வைரஸ் தாக்கி உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்!!

44

கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாபு. இவரது மனைவி தன்யா. இவர்களது மகள் 13 வயது தக்சினா. 8ம் வகுப்பு படித்து வரும் தக்சினாவுக்கு திடீரென தலைவலி மற்றும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சில நாட்களுக்கு முன்பு தக்சினா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், தக்சினாவுக்கு அரிய வகை அமீபிக் நோய் தாக்குதல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அவரது முதுகுத்தண்டு திரவத்தை பரிசோதித்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுமி தக்சினா, மூணாறுக்கு பள்ளி பயணம் சென்றபோது குளத்தில் குளித்தபோது இந்த நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Previous articleதீவிர சிகிச்சை பிரிவில் காதல் கணவன்.. மருத்துவர்கள் சொன்ன வார்த்தைய கேட்ட மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Next articleகள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை தீ வைத்து எரித்த மருமகள்!!