பள்ளியில் தாலி கட்டிக்கொண்ட மாணவன், மாணவி… சீரழியும் இளைய தலைமுறை!!

16

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியில் வசித்து வரும் 16 வயது மாணவனும் படித்து வருகிறார்.

மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலிகட்டி விட்டார். தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மாணவனிடம் விசாரித்தனர். இதனால் இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகிவிட்டார். இது குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் மாயமாகிய சிறுவன், சிறுமியர் இருவரையும் கண்டுபிடித்து விட்டனர். சிறுவனை குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பள்ளிக்கூடம் திறந்த உடன் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவன், மாணவிக்கு தாலி கட்டினார். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும். ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleஅண்ணன், தம்பி இரட்டையர்கள் வெட்டிக் கொலை!!
Next articleமாநிலத்தில் 3வது இடம்… 497 மதிப்பெண்கள் எடுத்தும் விஜய் விழாவுக்கு அழைக்கப்படாத மாணவி கண்ணீர் மல்க புகார்!!