3 மாதங்களில் 3வது மரணம்… அமீபிக் காய்ச்சலால் 14 வயது சிறுவன் பலி!!

33

கேரள மாநிலத்தில் அமீபா தொற்றுக்கு 14 வயது சிறுவன் பலியாகி உள்ளான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வரும் மிருதுல் என்ற சிறுவன் அசுத்தமான குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இச்சிறுவன் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ வல்லுனர் குழு உயர்தர சிகிச்சை வழங்கியது. இருந்த போதிலும் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த தகவலை கேரள மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 3 மாதங்களில் இது 3வது அமீபிக் மரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சுகாதாரத்துறை மக்களுக்கு சுத்தம் சுகாதாரத்தை பேண வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous articleதிருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்.. திடீரென மயங்கி விழுந்து இளம்பெண் மர்ம மரணம்!!
Next articleஆற்றில் இறங்கி செல்ஃபி புகைப்படம் : 2 கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!