கணவனுடன் தொடர் சண்டை.. டாக்டர் மனைவி தற்கொலை!!

6

கணவனுடன் தொடர்ந்து சண்டை எழுந்து வந்த நிலையில், டாக்டர் மனைவி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார். தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் மணிமாலா (38). சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் சார்ந்த நோய் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இவரது கணவர் மணிகண்டன் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜவுளித் தொழில் தொடர்பாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மணிகண்டன் அதிகாலையில் மனைவி அறைக்கு சென்றார். அப்போது அங்கு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், மனைவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், டாக்டர் மணிமாலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் மணிமாலா மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஸ்கூட்டி மீது லாரி மோதி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலி!!
Next articleஎதிர்ப்பை மீறி காதல் திருமணம்… இளம்பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்த குடும்பத்தினர்!!