கூடுதல் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்த கணவர், விபரீத முடிவு எடுத்த மனைவி!!

6

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார்.

இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதில், சுனிலுக்கு திருமணத்தின் போதே வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக இன்னும் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுனிலின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வருமாறு பூஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூஜா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர், தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் தான் வரதட்சணை கேட்டு சுனில் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி!!
Next articleபேச மறுத்ததால் ஆத்திரம்… கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை : அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்!!