ஸ்கூட்டி மீது லாரி மோதி கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலி!!

5

சென்னையில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், எதிர்பாராமல் திரும்பியதில் நிலைத்தடுமாறி ஸ்கூட்டியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிகள் மீது லாரி மோதியதில், தோழியுடன் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). மாநிலக் கல்லூரியில் வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாலை ரேணுகாதேவி, தன்னுடன் படிக்கும் தோழி செனாய் நகரை சேர்ந்த ஆர்த்தி (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

லேடி வெலிங்டன் கல்லூரியை நெருங்கும் போது, ​​ரேணுகாதேவிக்கு முன்னாள் சென்ற கார் திடீரென இடதுபுறமாக நின்று வலதுபுறம் செல்ல முயன்ற போது காரின் பின்னால் சென்றுக் கொண்டிருந்த ரேணுகாதேவி பதற்றமடைந்தார்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ரேணுகாதேவி, இருசக்கர வாகனத்துடன் கீழே சாய்ந்து ஸ்கூட்டியுடன் விழுந்துள்ளார். அப்போது, ​​அவ்வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி மீது மோதியது.

இதில் ஆர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தலையில் காயம் அடைந்த ஆர்த்தியை அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே காயங்களுடன் உயிர் தப்பிய கல்லூரி மாணவி ரேணுகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர் தாம்பரத்தை சேர்ந்த மாடசாமியை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஅடுத்த 2 நாளில் திருமணம் சுவரேறி குதித்து காதலனுடன் தஞ்சம் அடைந்த இளம்பெண்!!
Next articleகணவனுடன் தொடர் சண்டை.. டாக்டர் மனைவி தற்கொலை!!