நடிகை திவ்யா சேத் மகள் திடீர் மரணம்….!!!

48

நடிகை திவ்யா சேத் மகள் திடீரென மரணமடைந்துள்ளது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் மற்றும் அவர்கள் வாரிசுகளின் மரணம் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது.

குறிப்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பளர் கிறிஷான் குமாரின் மகள் சில தினங்களுக்கு முன்பு தான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையின் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை திவ்யா சேத். இவர் ஹம் லோக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவர் தனது மகள் மிஹிகா ஷாவுடன் டிவி சீரியல்கள் மற்றும் வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை திவ்யா சேத் தனது மகள் இறந்து விட்டதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அவரது மரணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மிஹிகா ஷா காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது மகளின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமைத்துனியை உல்லாசத்திற்கு அழைத்த அண்ணன் ஆத்திரத்தில் சாக்கு மூட்டையில் பொட்டலம் போட்ட தம்பி….!!!
Next articleகடன் தொல்லையால் மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய் கெஞ்சியும் கேட்டு கதறிய மகள்….!!!