பெண் போலீசுடன் கணவர் உல்லாசம் வெளுத்து வாங்கிய மனைவி…!!!

21

பெண் காவலருடன் போலீஸ்காரரான தனது கணவர் உல்லாசமாக இருந்த நிலையில், அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலேயே இங்கு பணிபுரியும் காவலர்களுக்கான காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை ‌ இங்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தங்கி இருந்த வீட்டிற்கு மற்றொரு காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆண் இன்ஸ்பெக்டர் சென்றிருந்தார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிய வந்தது.

இதனால் அவர் தன்னுடைய சகோதரர், மைத்துனர் மற்றும் சில உறவினருடன் அங்கு சென்றிருந்தார். பின்னர் தன் கணவர் மற்றும் அவருடன் இருந்த பெண் ஆகியோரை வெளியே இழுத்து அடித்துப்போட்டு தாக்குதல் நடத்தினார். தன் கணவரின் ஆடையை கிழித்து கோபத்தில் அந்த பெண்ணையும் அடித்து வெளுத்து வாங்கினார்.

இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர் அவரின் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரின் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அந்தப் ‌ பெண் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Previous articleசின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: திடீர் திருப்பம் – கணவர் ஹேம்நாத் விடுதலை….!!!
Next articleப்ரிட்ஜை திறந்த போது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு…!!!