ப்ரிட்ஜை திறந்த போது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு…!!!

35

ரொம்பவே கவனமாக இருங்க. குறிப்பாக மழைக்காலங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்க. பிரிட்ஜைத் திறந்த போது மின்சாரம் தாக்கியதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்த கவுதம்-பிரியா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், இவர்களது மூத்த மகள் ரூபாவதி(5) தனது தாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அலறல் சத்தத்துடன் சிறுமி கீழே விழுந்தார்.

உடனே பெற்றோர் சிறுமியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை பதறவைத்தது.

அக்கம்பக்கத்தினர், சிறுமியின் கைக்குழந்தையின் குரல் மீண்டும் எப்போது கேட்கும் என உடைந்த மனதுடன் கூறினர். மின்சாரம் தாக்கி சிறுமி இறந்தது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது மீண்டும் நிகழாமல் இருக்க குளிர்சாதன பெட்டியை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும் மற்றும் பிரிட்ஜ் கம்ப்ரசர் உடைந்துவிட்டதா? அதன் குழாயில் அடைப்பு உள்ளதா? கம்ப்ரசர் பழுதானால், மின் கசிவு பாலம் வெடிப்பது போன்ற ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படும் என்பதால், அதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும் என்று தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

Previous articleபெண் போலீசுடன் கணவர் உல்லாசம் வெளுத்து வாங்கிய மனைவி…!!!
Next articleஅவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு….!!!