மொட்டைமாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு…!!!

54

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன்(35).

இவரது மனைவி புவனேஸ்வரி(28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றநிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை, இவர்களின் வீட்டின் மொட்டை மாடி அருகே தாழ்வாகச் சென்றுக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கி சடலமாகக் கிடந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில், கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடதிற்கு வந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தம்பதியர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Previous articleபள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 7ம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து மரணம்…!!!
Next articleவிபத்தில் சிக்கிய தம்பதி குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த இளம்பெண்…!!!