‘குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ உருக்கமாக கடிதம் எழுதி தம்பதியர் தற்கொலை….!!!

55

’அப்பா… அம்மா… எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷன்புரா பகுதியில் வசித்து வருபவர் சவுரப். இவரது மனைவி மோனா. இந்த ஜோடிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

சவுரப் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் குழுவை நிர்வகித்தபோது, ​​​​அவர்கள் கமிட்டியில் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து வணிக நஷ்டத்தை எதிர்கொண்டனர். கடும் கடன் தொல்லையால், ஹரித்வாருக்குப் புறப்பட்ட தம்பதியர், கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கடனில் சிக்கித் தவித்ததால் சோகமான முடிவை எடுத்துள்ளதாகவும், இரு குழந்தைகளும் தாத்தா, பாட்டி வீட்டில் தங்குமாறு வாட்ஸ்அப்பில் செல்ஃபி எடுத்து அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களது தற்கொலைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகழுத்தில் ஷால் மாட்டி விளையாடிய 10 வயது சிறுமி மரணம்….!!!
Next article‘மூணு வருஷ காதல்..’ அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகள் அதிர்ந்த உறவினர்கள்….!!!