கணவருடன் சேர்ந்து வாழ பள்ளி மாணவியை விருந்தாக்கிய மனைவி கேரளாவில் அதிர்ச்சி…!!!

34

கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவியை மனைவியே கணவனுக்கு விருந்தாக்கி உள்ள சம்பவம் கேரளத்தை அதிர வைத்துள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே உள்ள திங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சரத் என்பவரின் மனைவி நந்தா (24).

இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். மகிழ்ச்சியாகச் சென்றிருக்க வேண்டிய வாழ்க்கையில், திருமணத்துக்குப் புறம்பான உறவால் பிரச்னை ஏற்பட்டது. நந்தாவுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதை அறிந்த சரத், நந்தாவை திட்டி, இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று பிரிந்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதே சமயம், மீண்டும் என்னுடன் வாழ விரும்பினால், ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்க நீ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனைவியிடம் தனது விபரீத ஆசையை தெரிவித்துள்ளார்.

முதலில் இதை செய்ய முடியாது என்று கூறிய நந்தா, கணவர் மிரட்டியதால் வேறு வழியின்றி கணவருடன் சேர்ந்து வாழும் ஆசையில் இதற்கு சம்மதித்துள்ளார். அதன்படி 15 வயது சிறுமியை கணவருடன் உல்லாசமாக இருக்க நந்தா ஏற்பாடு செய்துள்ளார். இதைப் பயன்படுத்திய சரத், சில ஆண்டுகளாக சிறுமியை பலமுறை அழைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

பள்ளியில் ஆசிரியைக்கு 10ம் வகுப்பு மாணவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதன்பின் மாணவியை தனியாக அழைத்து சென்று விசாரித்த போது சரத் தன்னை பலமுறை அத்துமீறி பலாத்காரம் செய்து வருவது குறித்து கூறியுள்ளார். இது குறித்து ஆற்றங்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சரத் மற்றும் நந்தாவை கைது செய்தனர்.

Previous articleவெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் மரணம்…!!!
Next article16 வயது சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபர்…!!!