13 வயது மகளுடன் கணவன், மனைவி கால்வாயில் தற்கொலை பெரும் சோகம்….!!!

25

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர்.

அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறித்துடித்தனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரீனிவாஸ் கடனால் அவதிப்பட்டு வந்துள்ளார். கார் ஓட்டுநரான அவர், கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous article2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை…!!!
Next articleதிருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை மறைக்க காதலன் செய்த கொடூரம்…!!!