தகாத உறவுக்கு இடையூறு 5 மாத பெண் குழந்தையை கொன்று சாக்கடையில் வீச்சு: கடத்தல் நாடகமாடிய தாய் கைது….!!!

40

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூரை சேர்ந்தவர் மணிராஜா(24), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), 5 மாதமே ஆன லாவண்யா என 2 பெண் குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறில் ராஜேஸ்வரி குழந்தைகளுடன் வடலூரில் உள்ள தந்தை கொளஞ்சி வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ராஜேஸ்வரி வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், வடலூர் கடைவீதி பகுதிக்கு சென்றுவிட்டு 5 மாத குழந்தை லாவண்யாவுடன் வீட்டிற்கு சென்றபோது சந்தைதோப்பு அருகே வந்த எனது கணவர் மணிராஜா மற்றும் 2 பேர் குழந்தையை பிடுங்கி கடத்தி சென்றுவிட்டனர் என கூறியிருந்தார். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவரை பிரிந்து 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கைக்குழந்தை இருப்பதால் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஸ்வரி 5 மாத குழந்தை லாவண்யாவை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்கில் சுற்றி அருகே உள்ள அய்யன் ஏரி சாக்கடை கால்வாயில் போட்டுள்ளார்.

இதனை மறைப்பதற்காகவும், போலீசை திசை திருப்புவதற்காகவும், கணவர் 2 பேருடன் வந்து கடத்தி சென்றதாக புகார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து 5 மாத குழந்தையின் உடலை சாக்கடை கால்வாயில் இருந்து போலீசார் மீட்டனர். இதையடுத்து ராஜேஸ்வரியை நேற்று கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Previous articleஉளுந்தூர்பேட்டையில் வங்கி பெண் அதிகாரி கொலை எஸ்ஐ உள்பட பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததால் மனைவியை கொன்றேன்….!!!
Next article25 கிலோ தங்கம் அணிந்து திருமலை கோயிலுக்கு சென்ற புனே தொழிலதிபர் ….!!!