தண்டவாளத்தில் குடை பிடித்து தூங்கிய நபர், ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு….!!!

25

தண்டவாளத்தில் குடை பிடித்து அசந்து தூங்கிய நபரை கண்டதால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.

பொதுவாகவே அனைவரும் காலையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பதால் எங்காவது சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். அதற்காக அமைதியாக இருக்கும் இடத்தையும், அழகாக இடத்தையும் தேர்வு செய்து அங்கு செல்வோம்.

இதில், சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என்று பல்வேறு விடயங்கள் உள்ளன. ஆனால், இங்கு நபர் ஒருவர் தண்டவாளத்தில் அசந்து தூங்கியுள்ளார்.

ரயில்வே தண்டவாளத்தில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் குடை பிடித்தபடியே அசந்து தூங்கியுள்ளார். இதனை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர், ரயிலில் இருந்து கீழே இறங்கி சென்று உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். இதையடுத்து தான் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த நபரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Previous articleஅலைபாயுதே பட பாணியில் வாழ்ந்த காதல் மனைவியை கொன்ற வாலிபரை காவலில் விசாரிக்க நடவடிக்கை….!!!
Next articleவெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர் வைரலாகும் புகைப்படம்….!!!