தற்கொலை செய்ததாக நாடகம் போதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி….!!!

31

பிரேத பரிசோதனை அறிக்கையால் சிக்கினார்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஆகும்.

இவரது மனைவி நந்தினி. இவர், காபி தூள் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அக்கம் பக்கத்தினர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு, பரிசோதித்து பார்த்ததில் நாகராஜை கழுத்தை நெரித்து கொன்றதற்கான அடையாளங்கள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் நந்தினியிடம் துருவி துருவி விசாரித்தனர். அப்போது, கணவனை கழுத்தை நெரித்து கொன்றதாக நந்தினி தெரிவித்தார். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வந்து தகராறு செய்ததால், ஆத்திரத்தில் கழுத்தை நெரித்ததில் கணவர் உயிரிழந்து விட்டார்.

போலீசிடமிருந்து தப்பிக்க தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியதாக தெரிவித்தார். இதையடுத்து, நந்தினியை போலீசார் கைது செய்தனர்.

Previous articleவிஷமானது உணவு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மாணவி திடீர் மரணம்……!!!
Next articleகொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தப்ப ஏழாவது மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த தம்பதியர்….!!!