243 அடி உயரத்தில் சிக்கிய மக்கள்….!!!

12

மெக்சிகோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம். அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் வீடியோ அனைவரையும் ஒரு நொடி உறைய வைத்துள்ளது.

35 வினாடிகள் ஓடும் வீடியோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். பயத்தில் அவர்கள் குரல் எழுப்புகின்றனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு சவாரி வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியதாக பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது

Previous articleகொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தப்ப ஏழாவது மாடியிலிருந்து குழந்தையுடன் குதித்த தம்பதியர்….!!!
Next articleகுடிபோதையில் அட்ராசிட்டி ஆத்திரத்தில் கணவனை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி….!!!