நடிகர் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். கேரளா ஹேமா கமிட்டி குறித்து பேசிய விஷால், “தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவர்களை பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகளுக்கு தனிப்பட்ட பாதுகாவலர்கள் உள்ளனர்.
20% பேருக்குத்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு இல்லாமல் பல அலுவலகங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் எந்த நிறுவனத்திற்கு செல்கிறார்கள், அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்பட தயாரிப்பாளர்களா?
அதை புரிந்து கொள்ள வேண்டும்.ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரையுலகம் குறித்து 10 பேர் கொண்ட குழு அமைக்க தமிழ் திரைப்பட சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.அது விரைவில் அமைக்கப்பட உள்ளது.
பெண்களை இப்படி பயன்படுத்த நினைப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.என விஷால் பேசியிருந்தார். மேலும் விஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் விஷால், “ஸ்ரீரெட்டி யார் என்று தெரியவில்லை, அவர் செய்த குறும்புகள் தான் தெரியும்.
ஆதாரம் இல்லாமல் ஒருவரை குற்றம் சாட்டுவது தவறு” என்று கூறியுள்ளார். இதையடுத்து பிரபல யூடியூபரும் நடிகையுமான ஸ்ரீ ரெட்டியின் எக்ஸ் தளம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“ஒரு பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதற்கு முன், உங்கள் நாவில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் தொந்தரவு செய்வதற்கும் நீங்கள் எவ்வளவு பெரிய ஃபிராட் என்று அனைவருக்கும் தெரியும்.
மீடியாக்களுக்கு முன்னால் உங்களைப் பற்றிய இந்த உண்மைகள், உங்கள் நிச்சயதார்த்தம் ஏன் நிறுத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என்னிடம் நிறைய செருப்பு இருக்கு அவற்றில் ஒன்று உங்களுக்கு வேண்டுமா? என்று கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. நடிகர் விஷாலை குறிப்பிட்டு அவர் இதை பதிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.