வேலூர் அருகே பள்ளி மாணவி கர்ப்பம் போலீஸ் விசாரணைக்கு பயந்து காதலன் விபரீத முடிவு….!!!

40

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசின் விசாரணைக்கு பயந்து காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவருக்கு 23 வயதில் தீனா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை ராபர்ட் காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானதாகவும் புகார்கள் எழுந்தது.

மாணவி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் சென்று மகள் கர்ப்பமானது குறித்து நியாயம் கேட்டு முறையிட்டுள்ளார்கள். அதன்பேரில் நேற்று காலை ஊர் பெரியவர்கள் தீனாவை அழைத்து விசாரித்துள்ளார்கள்.

இதனால் மாணவி கர்ப்பமானது குறித்து தன்மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்வார்களோ என்று அச்சம் அடைந்த தீனா, விசாரணைக்கு பயந்து தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தீனாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கட்டிட தொழிலாளி தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியை காதலித்து பாலியல் உறவில் ஈடுபட்டால் போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் போக்சோஅரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம் சாலை, மாந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் அப்துல்சமது மகன் நஸ்ருதீன் (24). காா் ஓட்டுநரான இவா் 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசார நஸ்ருதீனை போக்சோ சட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தனா்.

 

Previous articleசெக்ஸ் தொல்லையால் தான் சினிமாவிலிருந்து விலகினேன் நடிகை சுபர்ணா அதிர்ச்சி பேட்டி….!!!
Next article17 வயது சிறுவனுடன் எஸ்கேப்பாக நினைத்த 8ம் வகுப்பு மாணவி! ரூமில் வசமாக சிக்கினார் மருத்துவ பரிசோதனையில் பகீர்…..!!!