மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பெண் இளம் விஞ்ஞானி பரிதாபப் பலி….!!!

35

இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி.

அஸ்வினியும் அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் டாக்டர் அஷ்வினி சென்று கொண்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அந்த இறுதி நேரத்தில் அஸ்வினியும் அவரது தந்தையும் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து காரில் தண்ணீர் நிறைந்து வருவதையும் தங்களால் வெளியே வரமுடியாத பரிதாப நிலையையும் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் தான் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleநடிகை ரேவதி முதல் அன்சிபா வரை பாலியல் சீண்டலுக்கு ஆளானேன் கதறும் மோலிவுட் நட்சத்திர நடிகைகள்….!!
Next articleகாபியில் சயனைடு கலந்து இளம்பெண் கொலை காதல் கணவனும், மாமியாரும் செய்த கொடூரம்…..!!!