இரவில் படிப்பு பகலில் சமோசா விற்பனை நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்….!!!

12

தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவர் சாதனை

இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இரவு முழுவதும் படித்து விட்டு காலையில் சமோசா விற்பனை செய்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.

குறிப்புகளை காகிதங்களில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். இதுகுறித்து மாணவர் சன்னிகுமார் கூறுகையில், “மருந்துகளை பார்க்கும் போது எனக்கு எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. மக்களை நோய்களில் இருந்து காப்பேன்.

எனது படிப்பை சமோசா தொழில் பாதிக்காது. அதனை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

இதனிடையே, ‘பிஸிக்ஸ்வாலா’ என்ற நீட் தேர்வு பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலேக் பாண்டே என்பவர் சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ.6 லட்சம் நிதியை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அலேக் பாண்டே, “பிஸிக்ஸ்வாலா நடத்தும் நீட் தேர்வு பயிற்சியை டெலிகிராம் ஆப் மூலம் சன்னிக்குமார் படித்துள்ளார். அவருக்கு எங்களது ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார்.

Previous articleமாமியாரை கத்தியால் குத்திய மருமகள்….!!
Next articleமூளை சாவடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் அரசு அதிகாரிகள் நேரில் அஞ்சலி….!!