மூளை சாவடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம் அரசு அதிகாரிகள் நேரில் அஞ்சலி….!!

9

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த பள்ளி மாணவன் மரணமடைத நிலையில், மாணவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன. மாணவனின் இறுதி சடங்கில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நரசிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைக்குலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மகாலட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தருண். 13 வயதுடைய தருண், அதிராம்பட்டினம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி பள்ளியிலிருந்து, தனது உறவுக்கார பெண்ணான பவ்யாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாணவன் தருண் மூளைச் சாவு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் மாணவனின் தாயார் மகாலட்சுமி ஒப்புதலோடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் சிறுவனின் அனைத்து உடல் உறுப்புகளும் தானம் அளிக்கப்பட்டது .

இதில் மாணவர் உடலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அதிமுக அவை தலைவர் கல்யாணஓடை செந்தில் குமார் மாணவனை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி அரசு மரியாதை உடன் அடக்கம் செய்தனர்.

இந்த விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇரவில் படிப்பு பகலில் சமோசா விற்பனை நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்….!!!
Next articleலாரியின் மீது பைக் மோதி சம்பவ இடத்திலேயே அண்ணன், தம்பி உயிரிழப்பு….!!!